ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்துள்ளது.
அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து மைதானத்திற்குச் செல்லும் போது தமது குடும்பத்தினருடன் ஒன்றாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வீரர்கள் கட்டாயமாக அணிக்கென ஒதுக்கப்பட்ட பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
அவர்களது குடும்பத்தார் விரும்பினால் தனியான வாகனங்களில் மைதானத்திற்கு பிரவேசிக்க முடியும்.
ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது வீரர்கள் கைகுறைத்த மேலங்கிகளை அணிந்து கொண்டு பரிசுகளைப் பெற பிரவேசிக்கக்கூடாது
இந்த புதிய விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எச்சரித்துள்ளது.

