யாழில்.அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின்  38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார்.  தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Read More

கடந்த 08 நாட்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.  குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.  அதேவேளை, நீரில் மூழ்கிய சம்பவங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதிகளவிலான விபத்து மரணங்கள் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய…

Read More

யாழ்ப்பாண மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்  சுன்னாகம் பகுதியை சேர்ந்த மொரட்டுவா பல்கலைக்கழக மாணவன் , சக மாணவர்களுடன் , பெந்தோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்று கடலில் நீராடிய வேளை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்  கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற போதிலும் , மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.  சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

Read More

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றுள்ளனர்.  அதேநேரம் மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். …

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில்…

Read More

தெதுறு ஓயாவில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்பு

நிக்கவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றதில் காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மாயமான மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Read More

‘பொடி பெட்டி’யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொகு பெட்டியின் சகோதரர் பொடி பெட்டியை இலக்கு வைத்து அஹுங்கல்ல பகுதியில் நேற்று (16) இரவு 11.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும்போதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மூன்று தசாப்தங்களின் பின்னர் அமெரிக்கா – ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

இஸ்ரேலும் லெபனானும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன. நேற்று (14) வொஷிங்டனின் டி.சி.யில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக லெபனானும் இஸ்ரேலும் தங்களின் முதல் தூதரக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதற்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஹிஸ்புல்லாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவர இதுவொரு வரலாற்று வாய்ப்பு எனக் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான இடமும் நேரமும் பின்ன் தீர்மானிக்கப்படும்…

Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மாயம்

திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

ஈரான்–அமெரிக்கா பேச்சு: இரண்டாம் சுற்றுக்கு பாகிஸ்தான் முயற்சி

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றை அடுத்த வாரம் நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதியன்று முடிவடையவுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிசெய்ய, பாகிஸ்தான்…

Read More