அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…
ஈரான் உள்ளூர் விமான சேவைகள் நாளை ஆரம்பம்
மோதல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தெஹ்ரான் மற்றும் மஷாத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையே முதலில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதே நாளிலேயே அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த விமான சேவைகள் கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
உத்தரவிட்டால் தாக்குதல் தொடங்கும் – ட்ரம்ப்
போர்நிறுத்தம் தொடர்பில் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இருவார கால போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களை புதுப்பித்துக்கொண்டுள்ளது. எங்களிடம் போதுமான அளவு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இடைவெளியில் அவற்றை மேலும் வலுப்படுத்திக்கொண்டோம். தற்போது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களுக்கு முழுத் தயாராக உள்ளது. நான் உத்தரவு கொடுத்தால் மீண்டும் தாக்குதல் தொடரும்”…
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது
இந்தியா -தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31-ஆம் திகதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார்….
ஜனாதிபதி டிரம்ப் ஆட்சியில் தொடர்ந்து நீக்கப்படும் பெண் உயர் அதிகாரிகள்.. தொழிலாளர் துறைச் செயலாளர் பதவி நீக்கப்படுகின்றார்.
அமெரிக்காவின் தொழிலாளர் துறைச் செயலாளரான Lori Chavez-DeRemer பதவி விலகியுள்ளார். அமெரிக்காவில் உயர்பதவி வகித்த பெண் அலுவர்களுள் Kristi Noem, Pam Bondi என்ற இருவரையும் தொடர்ந்து வெளியேறும் மூன்றாவது பெண் உயர் அலுவலர் இவராவார். முதல் இருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. லோரி சாவெஸ்-டெரெமர், தன் பதவியில் இருந்து விலக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் மின்னசோட்டாவில் நடைபெற்ற குடியேற்றத் துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்திருந்தனர்….
தெற்கு லெபனானில் சிலுவை சேதம் – இராணுவ வீரரின் செயலுக்கு உலகளாவிய கண்டனம்!
தெற்கு லெபனானில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கிராமமான டெபெலில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், டெபெல் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர் ஒருவர், அங்கிருந்த சிலுவையைச் சேதப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களைப்…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டன. ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் நூற்றுக்கும்…
10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை
ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் தொடர்பான போர் பதற்றங்களால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள ஹோர்முஸ் நீரினைக்கு மாற்றாக இந்த நிலவழிப் பாதையைப் பயன்படுத்த முடியும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. கடல்வழிப் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது, இந்த எல்லைப் பாதை…
குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்
குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது இவ் புனரமைப்பிற்காக 984.73 மில்லியன் ரூபா செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மானிக்கப்பட உள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இறங்குதுறைக்கான முதலாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ,…
யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.



