சீகிரியாவில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

சீகிரியா – பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த 68 மதிக்கத்தக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி தனது மனைவியுடன் சீகிரியா, பிதுரங்கல வீதியில் பாதசாரியாகச் சென்று கொண்டிருந்த போதே, திடீரென அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Source : thamilan.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *