இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க இரு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைளின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதுவர்களுக்கு இடையே நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 நாள்…

Read More

இலங்கை, ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் டெனா என்ற கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அந்தக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்ததாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரான்…

Read More

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக கலாநிதி நய்யார் நசீர் நியமனம்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் [Major General (Retd) Dr Nayyar Naseer, HI (M)] நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்தார். இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கும் வர்த்தகம், பாதுகாப்பு…

Read More

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது. பகிரங்க பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (23) காலை 7.00  மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்முறை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க), தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மற்றும்…

Read More

அமெரிக்க கடற்படை செயலாளர் விலகல்

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலன், விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளரான சோன் பார்னெல் தெரிவித்துள்ளார். கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ தற்காலிக செயலாளராகப் பணியாற்றுவார் என்று அவர் கூறியுள்ளார். ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு மத்தியில் அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலனின் விலகலுக்கான காரணத்தை…

Read More

பல்கேரிய பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அமோக வெற்றி

ரஷ்ய ஆதரவு கொள்கை கொண்ட பல்கேரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரூமென் ரதேவ், பல்கேரிய பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். திங்களன்று வெளியான அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி இந்த வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வெற்றியின் ஊடாக பல்கேரியாவில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வெற்றியின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் அங்கம் வகிக்கும் பல்கேரியா மீண்டும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணவழிவகை செய்யும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். கருத்துக்…

Read More

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரானியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த முன்மொழிவை முன்வைக்கும் வரை காத்திருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது  பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத்…

Read More

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி

டிட்வா சூறாவளியினால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும்…

Read More

அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு

அஸ்வெசும நலத்திட்டத்தின் முதியோருக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. பயனாளர்கள் தங்களது வங்கி கிளைகளுக்குச் சென்று இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்….

Read More

அமைதிக்கான நடை பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்

ர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘அமைதிக்கான நடை பயணம்’ அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது.  இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.  இன்று காலை 6.30க்கு இந்த அமைதி நடை பயணம் ஆரம்பமானது.  கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடை பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.  அந்தப்…

Read More