நாங்கள் ஈரானின் பக்கமே உள்ளோம் – நாமல்

இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஈரானிய தலைவர், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தியுள்ளார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த ஈரானிய தலைவர் 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் எனவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்பவற்றுக்கு உதவியுள்ளார் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

இவரது ஆட்சிக்காலத்தில் ஈரான் இலங்கையின் உண்மையான நண்பனாக விளங்கியது எனவும் அன்னாரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் ஈரான் மக்கள் பக்கமாக நாங்கள் உள்ளோம் எனவும் யுத்தத்தால் அன்றி பேச்சுவார்த்தை மூலம் இப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *