ஈரானியப் படைகள் உடனடியாக சரணடைய வேண்டும்: ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் உடனடியாகத் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் நிச்சயம் மரணத்தைச் சந்திக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், நீங்கள் நிச்சயமாக மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *