அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரிவிதிப்பின்படி, அமெரிக்காவுக்கு உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினால், உலக நாடுகளுக்கு 130 பில்லியன் டொலர் கட்டணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதாகவும், வர்த்தகப் பற்றாக்குறைக் கையாளும் நோக்கில் என்றுகூறி, உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரியை விதித்துள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் விதித்த வரியானது சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், உலக நாடுகள் செலுத்திய வரியையும் திருப்பிச் செலுத்துமாறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

