யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம், கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் நேற்று (16) மாலை மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 59 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். காணித்தகறாறினால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

