இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) 5.2 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘நேற்றுக் காலை மாத்திரம் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டது.
3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெற்றோல் விநியோகித்துள்ளது. தேவை திடீரென அதிகரித்ததால் பல நிரப்பு நிலையங்களில் தற்காலிக பற்றாக்குறை ஏற்பட்டது.
மேலும், மோசடி செய்பவர்கள் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழக்கமான நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இயல்புநிலையை மீட்டெடுக்க பொலிஸார் தலையிட்டுள்ளனர். எரிபொருள் பீப்பாய்கள் அல்லது கெனிஸ்டர்களில் வழங்கப்படாது’’ என்றார்.

