
இந்திய, பாகிஸ்தான் நெருக்கடி – இலங்கை தலையிடாது
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மோதல்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிட மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார். இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி தொடர்பாக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அணிசேரா அணுகுமுறை…