ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில்இ சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்கள்…

Read More

மட்டக்களப்பின் சில பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்புதங்கத்தின் விலை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது. கடந்த காலங்களிலும் அக் குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.  எனவே,…

Read More

இலங்கை சார்ந்த விடயங்கள் நோர்வே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.  இதன்போது தொடரப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதில் வழங்கவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான…

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு…

Read More

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தல்

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதனும் கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தியா –…

Read More

தயாசிறி எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் – நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த முறைப்பாடை ஆராய்ந்த பின்னரே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் செயல்படுவதில் தலையிடுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .

Read More

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்திய  பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘செயற்கை  நுண்ணறிவு  தாக்கம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து  இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது….

Read More

கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை – நாரிகம கடலில் நீராடச்சென்ற மூன்றுபேர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.  நேற்று திங்கட்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 37 வயதுடைய பெண் ஒருவரும், 50 மற்றும் 18 வயதுடைய ரஷ்ய மற்றும் ஜெர்மன் நாட்டவர்களும் ஆவர். இதேவேளை, ஹிக்கடுவை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச்சென்ற பெண் ஒருவர் நீரோட்டத்தில் சிக்குண்டு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார்…

Read More

யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் நேற்று (16) மாலை மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 59 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். காணித்தகறாறினால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

Read More

இலங்கையில் பிரித்தானிய பிரதி பிரதமர்

பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லாமி இன்று (17) காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, ​​பிரதிப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவும், கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரித்தானியா ஆதரவை வழங்கும் மனிதாபிமான உதவி கூட்டாளர்களுடன் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Read More