GMOA – பணிப்புறக்கணிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவுற்றது. இது தொடர்பான மேலதிக விடயங்கள் இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்க துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

Read More

க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் உயிரிழப்பு!

க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (மார்ச் 31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா பகுதியில் திட்டமிடப்பட்ட வழக்கமான பயணத்தில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் முடிவில், விமானம்…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டிலுள்ள உள்ள 2,362 நிலையங்களில் நடைபெற்ற உயர்தர தேர்வில் மொத்தம் 340,525 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 246,521 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர். பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் காணலாம்

Read More

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் நியமனம்

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளராக, முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் முன்னாள் தளபதியான முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நியமனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும், இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Read More

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது தொடர்ந்து…

Read More

ஐ.பி.எல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து மைதானத்திற்குச் செல்லும் போது தமது குடும்பத்தினருடன் ஒன்றாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, வீரர்கள் கட்டாயமாக அணிக்கென ஒதுக்கப்பட்ட பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும்.  அவர்களது குடும்பத்தார் விரும்பினால் தனியான வாகனங்களில் மைதானத்திற்கு பிரவேசிக்க முடியும். ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது வீரர்கள் கைகுறைத்த மேலங்கிகளை அணிந்து கொண்டு…

Read More

விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம்.  ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது.  விலை சூத்திரம் என்பது ஒன்றும் விசித்திரமான சூத்திரம் அல்ல.  எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள்,…

Read More

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரவுக்கிடையே தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுவான சவால்களில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விவாதித்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read More

அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள மாட்டோம் – ஈரான் ஒப்புதல்: டிரம்ப்

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அங்குள்ள எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள…

Read More