பிரேசில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரேசில், மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 21 பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம் காட்டி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  தொடர்ந்தும் அம் மாநிலத்தில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Read More

இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். தொடர்ந்து இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்து பேசிய மோடி, கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலைத்தொடர்பு போன்ற துறைகள் தொடர்பில் கலந்துரையாடினார். தொடர்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இதையடுத்து, இந்தியா – இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வணிகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

Read More

நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார் பொடி லெசி

இந்தியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி எனப்படும் , ஜனித் மதுசங்க 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். அதற்கமைய, அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று நாட்டுக்குக் அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில்இ சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்கள்…

Read More

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் தாங்கள் இப்போது “நேரடிப் போரில்” (Open War) ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான்…

Read More

மட்டக்களப்பின் சில பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்புதங்கத்தின் விலை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது. கடந்த காலங்களிலும் அக் குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.  எனவே,…

Read More

பூமிக்கு வரும் ஏலியன்கள்?

நமது பூமிக்கு வெளியே உள்ள பிற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா? ‘ஏலியன்கள்’ உண்மையிலேயே இருக்கிறார்களா? என்ற கேள்வி பல தசாப்தங்களாக மனித குலத்தை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆனால் இதுவரை வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான, அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை என்பது விஞ்ஞானிகளின் நிலைப்பாடாகும். சமீபத்தில் சூரிய குடும்பத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ‘3I/ATLAS’ என்ற விண்வெளி பொருள் குறித்து சில சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. இது ஒரு சாதாரண இட்நட்சத்திர (interstellar) விண்கல் தானா? அல்லது…

Read More

இலங்கை சார்ந்த விடயங்கள் நோர்வே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.  இதன்போது தொடரப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதில் வழங்கவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி எழுப்புவது கடினம் – முரளிதரன்

“உண்மையை உணருங்கள், உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்”  இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றியின் தொடக்கத்தை எடுத்திருந்தாலும், அந்த வெற்றியின் தாளத்தை தக்கவைக்க அணி தவறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில், ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். இத்தகைய சூடான…

Read More

அமெரிக்க படகின் மீது கியூபா பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது கரையோர பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, அறுவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கப்பலில் இருந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Read More