TSEditor

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர தெரிவித்துள்ளார். நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட குறித்த சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

எரிவாயு விலை உயர்வு – உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் விருந்தக உரிமையாளர்களின் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியன 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதேநேரம், தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நேபாளத்தில் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்வு

நேபாள அரசாங்கம் விமான எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலையால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பொக்காரா மற்றும் பைரவா ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விலை முறையே 116.2மூ மற்றும்…

Read More

வீட்டின் சுவரில் லொறி மோதி விபத்து

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறி ஒன்று என தெரியவந்துள்ளது. இதன் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்…

Read More

இந்தோனேசியாவில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் தீ

இந்தோனேசியாவின் பெகாசி மாகாணம், முஸ்திகஜயாவில் உள்ள சிமுனிங் என்ற இடத்தில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதால் வெடிப்புகள் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரத் தடை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது.  தீயணைப்புப் படையினர் இன்னும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

ன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில்…

Read More

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இது 7.4 அலகாக பதிவாகியுள்ளதாக சர்வதேச நில அதிர்வு ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத்…

Read More

ஈராக்கில் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்வதேச ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த போர் செய்தியாளரான ஜெல்லி கிட்டில்சன், உலகின் மிக அபாயகரமான போர் முனைகளுக்கே நேரடியாகச் சென்று துணிச்சலாகச் செய்தி சேகரிப்பதில் பெயர் பெற்றவர். தற்போது ஈராக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கள…

Read More

ஐபிஎல் கிரிக்கெட்; டில்லி – லக்னோ இன்று மோதல்

லக்னோவில் இன்று நடைபெறும் 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், அக்சர் பட்டேல் தலைமையிலான டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப் போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read More

மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின் பறிமுதல்

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (01) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. படகும் அதிலிருந்த 6 சந்தேக நபர்களும் தொடர்பாடல் உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போதைப்பொருளானது,…

Read More