அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் அசௌகரியம்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.  மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,…

Read More

பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு- தொழிற்சங்க நடவடிக்கை காரணமா?

மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையை சரிசெய்ய சில மணி நேரம் எடுக்கும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Read More

பஸ் கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறாயினும் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிரண்டா தெரிவித்துள்ளார்.

Read More

பண்டாரகம பகுதியில் விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில் வீதியின் எதிர்ப்பக்கமாகச் செல்ல முயன்றபோது குறித்த பெண் மீது மோதியுள்ளது. குறித்த லொறியானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் உள்ள டயர் கடையின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை முச்சக்கர வண்டியில் பண்டாரகம மாவட்ட…

Read More

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2 வரை மாத்திரம் 3642 விபத்துகள் பதிவாகியுள்ளன. ஆவற்றுள் 405 வாகன விபத்துகளும் அடங்குகின்றன. இதன் காரணமாக 422 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை கிரிக்கெட்டை இடைக்கால நிர்வாகத்திடம் வழங்க முனையும் அரசு

இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த நிர்வாகத்தை இடைக்கால குழுவிடம் வழங்க ஆலோசித்து வருவதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். 2026 ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூரிய விலகினார்.  இந்நிலையில், ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தை இராஜினாமா செய்யக்கோரி இலங்கை கிரிக்கெட் தலைமையகம் முன்பு கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம்…

Read More

இழுபறியில் இருந்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி சட்டத்தரணி றியாஸ் ஆதம் வசமானது

முன்னாள் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை அடுத்து தவிசாளர் பதவி காலியாகியதையடுத்து புதிய தவிசாளரை தேர்வு செய்ய சபை கூட்டம் அழைக்கப்பட்டது. ஆனால், முதல் இரு அமர்வுகளில் தவிசாளர் தேர்வு நடைபெறவில்லை.  அந்த சந்தர்ப்பத்தில் சபை உறுப்பினர்கள் போதுமானதாக கலந்து கொள்ளாததால் கோரம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றது. அதனால் தவிசாளரைத் தேர்வு செய்ய முடியவில்லை. பிரதேச சபையில் பல கட்சிகள் உறுப்பினர்களைக் கொண்டிருந்ததால், யார் தவிசாளராக வர வேண்டும் என்ற விவகாரத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதனால்…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜொனதன் ட்ரொட் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த நியமனம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யவில்லை. சனத் ஜெயசூர்யவின் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதமே காலாவதியாகவுள்ளது. இது தொடர்பில் ஜயசூர்ய மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இடையே விரையில் பேச்சுவார்த்தை…

Read More

இ.மி.சபையின் 6 நிறுவனங்கள் கலைப்பு

நாட்டின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும். 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய…

Read More