பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் படுகாயம்

பஹ்ரைனின் சித்ரா பகுதியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் அடங்குவர் என பஹ்ரைன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

வளைகுடா போரால் கப்பல் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான யுத்தம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை தொடரும் சூழலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய சந்தை வியாபாரப் பொருட்களையும் மறைமுகமாகத் தாக்குமெனவும் குறிப்பாக, இலங்கைக்கு இந்நிலைமை ஏற்படுமெனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொருட்கள் விநியோகச் சங்கிலியின் தடங்கலால் கடல் மார்க்க வர்த்தகக் கட்டணம் பெருமளவில் அதிகரிக்குமென கடல் போக்குவரத்து கொழும்பு பயிற்சி நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் மாசகொரல்ல தெரிவித்தார். இந்நிலைமை இம்மாத…

Read More

இலங்கை கிரிக்கெட்டை இடைக்கால நிர்வாகத்திடம் வழங்க முனையும் அரசு

இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த நிர்வாகத்தை இடைக்கால குழுவிடம் வழங்க ஆலோசித்து வருவதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். 2026 ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூரிய விலகினார்.  இந்நிலையில், ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தை இராஜினாமா செய்யக்கோரி இலங்கை கிரிக்கெட் தலைமையகம் முன்பு கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம்…

Read More

இழுபறியில் இருந்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி சட்டத்தரணி றியாஸ் ஆதம் வசமானது

முன்னாள் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை அடுத்து தவிசாளர் பதவி காலியாகியதையடுத்து புதிய தவிசாளரை தேர்வு செய்ய சபை கூட்டம் அழைக்கப்பட்டது. ஆனால், முதல் இரு அமர்வுகளில் தவிசாளர் தேர்வு நடைபெறவில்லை.  அந்த சந்தர்ப்பத்தில் சபை உறுப்பினர்கள் போதுமானதாக கலந்து கொள்ளாததால் கோரம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றது. அதனால் தவிசாளரைத் தேர்வு செய்ய முடியவில்லை. பிரதேச சபையில் பல கட்சிகள் உறுப்பினர்களைக் கொண்டிருந்ததால், யார் தவிசாளராக வர வேண்டும் என்ற விவகாரத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதனால்…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜொனதன் ட்ரொட் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த நியமனம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யவில்லை. சனத் ஜெயசூர்யவின் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதமே காலாவதியாகவுள்ளது. இது தொடர்பில் ஜயசூர்ய மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இடையே விரையில் பேச்சுவார்த்தை…

Read More

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வெளியான அறிவிப்பு

ஈரானின் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளதோடு, 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைலுக்கு அப்பால் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  குறித்த கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர்களுள் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின்…

Read More

இ.மி.சபையின் 6 நிறுவனங்கள் கலைப்பு

நாட்டின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும். 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய…

Read More

ஈரானின் தலைமை அழிக்கப்படும் வரை போர் தொடரும் – ட்ரம்ப்

இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,  “ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை.  ஈரானில் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதியுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும்.  ஈரானின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்ய விரும்புகிறேன். அமெரிக்காவை போருக்கு இட்டுச் செல்லாத தலைவரை தெரிந்தெடுக்க விரும்புகிறோம்” என்றார்.

Read More

சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றிக் கதாநாயகி முத்தையா வனிதா

இந்தியாவின் நிலவுப் பயணமான ‘சந்திரயான்-2’ திட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் திட்ட இயக்குநர் முத்தையா வனிதா ஆவார். இஸ்ரோவில் பல தசாப்தங்களாகப் பணியாற்றி வரும் இவர், தரவு கையாளுதல் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து, இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான்-2-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதில் இவரது நிர்வாகத் திறன் முக்கியமானது. 2006-ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி விருதைப் பெற்ற இவர், செயற்கைக்கோள் வடிவமைப்பிலும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். கடினமான…

Read More

“ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையினை நினைவூட்டுகிறது: சிறீதரன் எம்.பி…..!

“சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது” எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். ​”சுதந்திரப்பறவைகள்” மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் தின நிகழ்வில், முதன்மை அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ​அவர் மேலும் தெரிவிக்கையில்: ​”ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத்…

Read More