மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின் பறிமுதல்

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (01) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. படகும் அதிலிருந்த 6 சந்தேக நபர்களும் தொடர்பாடல் உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போதைப்பொருளானது,…

Read More

பங்களாதேஷ் சிறையிலிருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

பங்களாதேஷில் சிறையில் இருந்த 6 இலங்கை மீனவர்கள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு நாளை (02) அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2025, ஜூலை 16 அன்று, ‘சுடு துவா 4’ (IMULA 0138 PTM) என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் பயணம் செய்த மீனவர் குழுவினர், கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பங்களாதேஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்….

Read More

இன்று முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும். 61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. 91 – 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான…

Read More

GMOA – பணிப்புறக்கணிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவுற்றது. இது தொடர்பான மேலதிக விடயங்கள் இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்க துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டிலுள்ள உள்ள 2,362 நிலையங்களில் நடைபெற்ற உயர்தர தேர்வில் மொத்தம் 340,525 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 246,521 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர். பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் காணலாம்

Read More

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது தொடர்ந்து…

Read More

விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம்.  ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது.  விலை சூத்திரம் என்பது ஒன்றும் விசித்திரமான சூத்திரம் அல்ல.  எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள்,…

Read More

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரவுக்கிடையே தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுவான சவால்களில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விவாதித்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read More

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகள் நீக்கப்படவுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.  இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத்…

Read More