ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று
வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டுக்கான முழு சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன், நீல விளிம்புடன் காட்சியளிக்கும். முழு கிரகணத்தின்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது. இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்….

