விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருள் விலை அதிகரிப்பு
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது. விலை சூத்திரம் என்பது ஒன்றும் விசித்திரமான சூத்திரம் அல்ல. எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள்,…

