ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தபால் ரயிலொன்று இன்று (17) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானையுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே காட்டு யானை உயிரிழந்துள்ளது. காட்டு யானையின் காலின் ஒரு பகுதி ரயிலின் இயந்திரத்தில் சிக்கியதனாலேயே ரயில் தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல வனப் பகுதியிலிருந்து சோமாவதி வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : thamilan.lk

