Latest posts

All

மூன்று தசாப்தங்களின் பின்னர் அமெரிக்கா – ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

இஸ்ரேலும் லெபனானும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன. நேற்று…

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். வழக்கமாக…

வெளிநாடு

மூன்று தசாப்தங்களின் பின்னர் அமெரிக்கா – ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை 01
02
நேபாளத்தில் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்வு
03
இந்தோனேசியாவில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் தீ
04
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

சினிமா

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
தெதுறு ஓயாவில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்பு
‘பொடி பெட்டி’யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
மூன்று தசாப்தங்களின் பின்னர் அமெரிக்கா – ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

உள்நாடு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.  இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில்…

Read More

தெதுறு ஓயாவில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்பு

நிக்கவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றதில் காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மாயமான மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Read More

‘பொடி பெட்டி’யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொகு பெட்டியின் சகோதரர் பொடி பெட்டியை இலக்கு வைத்து அஹுங்கல்ல பகுதியில் நேற்று (16) இரவு 11.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும்போதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மூன்று தசாப்தங்களின் பின்னர் அமெரிக்கா – ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

இஸ்ரேலும் லெபனானும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன. நேற்று (14) வொஷிங்டனின் டி.சி.யில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக லெபனானும் இஸ்ரேலும் தங்களின் முதல் தூதரக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதற்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஹிஸ்புல்லாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவர இதுவொரு வரலாற்று வாய்ப்பு எனக் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான இடமும் நேரமும் பின்ன் தீர்மானிக்கப்படும்…

Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மாயம்

திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

ஈரான்–அமெரிக்கா பேச்சு: இரண்டாம் சுற்றுக்கு பாகிஸ்தான் முயற்சி

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றை அடுத்த வாரம் நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதியன்று முடிவடையவுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிசெய்ய, பாகிஸ்தான்…

Read More

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். வழக்கமாக தானாகவே புதுப்பிக்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, இந்த முறை புதுப்பிக்கப் போவதில்லை எனவும் போர்ச் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய அரசு அறிவித்துள்ளது

Read More

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூட ஈரான் முடிவு

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. அதேபோல் லெபனான் மீதான தாக்குதல் நீடித்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவேண்டிய நிலைமை வரலாமெனவும் ஈரான் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தினுள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 300 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. படிப்பின் பின்னரான வரையறுக்கப்பட்ட சேவை வைத்தியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

களுத்துறை பணிமனை அருகில் வலம்புரி சங்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) பகல் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த வலம்புரியை ரூபா 35இலட்சத்துக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்தமை தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் சந்தேக நபர் தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதோடு, வலம்புரி சங்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குருநாகலையைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள்…

Read More