முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது: தேசிய சுதந்திர முன்னணி கடும் கண்டனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ஜெயந்த சமரவீர, இந்தத் தன்னிச்சையான கைது நடவடிக்கையைத் வன்மையாகக் கண்டித்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும்…

