பண்டாரகம பகுதியில் விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில் வீதியின் எதிர்ப்பக்கமாகச் செல்ல முயன்றபோது குறித்த பெண் மீது மோதியுள்ளது. குறித்த லொறியானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் உள்ள டயர் கடையின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை முச்சக்கர வண்டியில் பண்டாரகம மாவட்ட…

Read More

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2 வரை மாத்திரம் 3642 விபத்துகள் பதிவாகியுள்ளன. ஆவற்றுள் 405 வாகன விபத்துகளும் அடங்குகின்றன. இதன் காரணமாக 422 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை கிரிக்கெட்டை இடைக்கால நிர்வாகத்திடம் வழங்க முனையும் அரசு

இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த நிர்வாகத்தை இடைக்கால குழுவிடம் வழங்க ஆலோசித்து வருவதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். 2026 ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூரிய விலகினார்.  இந்நிலையில், ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தை இராஜினாமா செய்யக்கோரி இலங்கை கிரிக்கெட் தலைமையகம் முன்பு கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம்…

Read More

இ.மி.சபையின் 6 நிறுவனங்கள் கலைப்பு

நாட்டின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும். 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More

நாட்டில் போதியளவில் எரிபொருள் இருக்கின்றது – ஜனாதிபதி தெரிவிப்பு

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

Read More

நாங்கள் ஈரானின் பக்கமே உள்ளோம் – நாமல்

இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானிய தலைவர், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தியுள்ளார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த ஈரானிய தலைவர் 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் எனவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்…

Read More

அலி கொமெய்னி மறைவு – ரவூப் ஹக்கீம் அனுதாபம்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய…

Read More

ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – ரணில்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளா். இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார். “ஒரு அரசாங்கத்தை மாற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளார். ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது….

Read More

5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) 5.2 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘நேற்றுக் காலை மாத்திரம் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டது. 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெற்றோல் விநியோகித்துள்ளது. தேவை திடீரென அதிகரித்ததால் பல நிரப்பு நிலையங்களில்…

Read More