Latest posts

All

கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ்

அமைதிக்கான நடைபயணம் இன்று கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறுவதால் விசேட போக்குவரத்து திட்டம்…

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க…

வெளிநாடு

வடக்கு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஐவர் பலி 01
02
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப்
03
அமெரிக்க கடற்படை செயலாளர் விலகல்
04
பல்கேரிய பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அமோக வெற்றி

சினிமா

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது
கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ்
போதைப்பொருள் பயன்படுத்திய நவாஸ் மீது பாக். சபை விசாரணை
வடக்கு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஐவர் பலி

உள்நாடு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.  இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…

Read More

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முற்பட்டபோது அதனைத் தடுக்க சிறைக் காவலர் ஒருவர் முயற்சித்துள்ளார். இதன்போது நடந்த சம்பவத்தில் இரு கைதிகளும் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38 வயதான கைதியே இவ்வாறு…

Read More

கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ்

அமைதிக்கான நடைபயணம் இன்று கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறுவதால் விசேட போக்குவரத்து திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இன்று (28) காலை 11.00 மணி முதல் கீழ்கண்ட வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர…

Read More

போதைப்பொருள் பயன்படுத்திய நவாஸ் மீது பாக். சபை விசாரணை

பாகிஸ்தான் சகலதுறை வீரர் முகமது நவாஸ் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தின்போதும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ஊக்கமருந்து சோதனையிலேயே அவர், போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.), பாக். கிரிக்கெட் சபைக்கு அறிவித்ததை அடுத்தே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதை பாக். கிரிக்கெட் சபை பேச்சாளர்…

Read More

வடக்கு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஐவர் பலி

வடக்கு காசாவில் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு காசாவின் பெய்ட் லஹியாவில் உள்ள அல்-கஸ்ஸாம் மசூதிக்கு அருகே பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கையில் அதனை மீறும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காசா அரசாங்க ஊடக அலுவலகம்…

Read More

2026 A/L பரீட்சை விண்ணப்பங்களுக்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு

– கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டம் 2026 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் A/L பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம்…

Read More

சிங்களம், தமிழ்மொழி கற்கையை

பணிகளில் பிரயோகிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்ற அரச ஊழியர்கள் அக்கற்கையை பணிகளில் பயன்படுத்துவதற்குரிய இலக்குகளை அடைவதை உறுதி செய்யும் வகையில் ஒரு செயல் பொறிமுறையை மேற்கொள்வதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவுத்தியுள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மொழிகளைக் கற்கும் அரச ஊழியர்களின்…

Read More

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.  வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க இரு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைளின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதுவர்களுக்கு இடையே நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 நாள்…

Read More

இலங்கை, ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் டெனா என்ற கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அந்தக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்ததாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரான்…

Read More

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக கலாநிதி நய்யார் நசீர் நியமனம்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் [Major General (Retd) Dr Nayyar Naseer, HI (M)] நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்தார். இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கும் வர்த்தகம், பாதுகாப்பு…

Read More