TSEditor

டிட்வா தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்பட்டன

டிட்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நிகழ்வு நுவரெலியா நகரின் மையப்பகுதியில் இன்று நடைபெற்றது. சூழலியல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக, டிட்வா மீளாய்வு என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று, ஒரு திட்டத்தைத் தயாரித்து இதில் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அதற்கான…

Read More

வீட்டு பணியாளர்கள் தொடர்பான பொலிசாரின் அவசர வேண்டுகோள்

நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ பணிக்கமர்த்தப்படுபவர்களே இவ்வாறான திருட்டுச்…

Read More

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா?

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்துக்கு மேலதிகமாக இலங்கைத் தமிழர்கள் எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்த விடயத்தினை ஆராய்வதாகவும் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்த குறித்த எண்ணிக்கையான இந்திய…

Read More

எத்தியோப்பியாவில் மண்சரிவு – 50 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே மண்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், இந்த மண்சரிவுகளில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 125 பேர்…

Read More

இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை எந்தவிதக் கட்டணமுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்த பல…

Read More

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் அசௌகரியம்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது…

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய 3,990 ரூபாயாகும் இதன்படி, 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 1,602 ரூபாயாகும். 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின்…

Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் தீப்பந்தப் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் இன்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியுள்ளனர். இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை பாலர் பாடசாலைகளாக கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று…

Read More

ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு அதிகாரிகள் மரணம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த  சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிச் சென்ற கேப்டன் சயீத் அல் பலூஷி மற்றும் முதல் லெப்டினன்ட் அலி அல் துனைஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்….

Read More

ஈரான் கப்பல் தாக்கப்பட முன்னர் நடந்தது என்ன?

ஈரானிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் பின்னணியில் அவுஸ்திரேலிய கடற்படையினரின் பங்களிப்பு குறித்து விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை, காலியிலிருந்து சற்று தொலைவிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் மூவர் இருந்ததாக சென்றவாரம் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்போன்ஸி தெரிவித்திருந்தார். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் சர்லொத் இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஈரானிய போர்க் கப்பலை தாக்கி மூழ்கடித்தது. இத்தாக்குதலில் குறைந்தது 87 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய போர்க் கப்பலான…

Read More