பொலிஸாரின் பெயரில் பரவும் போலிப் பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு முற்றிலும் போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் பொருளாதார நெருக்கடி காலத்தில் பொதுமக்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்” எனும் தலைப்பில், பொலிஸார் அறிவுரை வழங்குவது போல் அமைந்துள்ள அந்தச் செய்திக்கும் இலங்கை பொலிஸாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு ஏதேனும் அறிவித்தல் விடுக்கப்படுவதாயின், அவை…

