பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரவுக்கிடையே தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுவான சவால்களில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விவாதித்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read More

அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள மாட்டோம் – ஈரான் ஒப்புதல்: டிரம்ப்

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அங்குள்ள எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள…

Read More

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகள் நீக்கப்படவுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.  இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத்…

Read More

ஈராக்கின் மொசாட் அலுவலகம் மீது தாக்குதல்

ஈராக் நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் அலுவலகத்தை குறி வைத்து இன்று (23) அதிகாலை ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. ஈரான் ஆதரவுக் குழுவான அஷாப் அல் – கஹ்ஃப் இத் தாக்குதலை உறுதி செய்துள்ளது. மேலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறும் அவ் அமைப்பு எச்சரித்துள்ளது. இத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Read More

உலக வாழ் அமெரிக்கர்களை எச்சரித்தது இராஜாங்கத் திணைக்களம்!

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களையும், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்களையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்துகிறது.  வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு எச்சரிக்கைகளில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது ஏற்படும் வான்வெளி மூடல்கள் பயண இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். மத்திய கிழக்குக்கு வெளியே உள்ளவை உட்பட, அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.  ஈரானுக்கு ஆதரவான குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள மற்ற அமெரிக்க நலன்களையோ அல்லது…

Read More

பொலிஸாரின் பெயரில் பரவும் போலிப் பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு முற்றிலும் போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் பொருளாதார நெருக்கடி காலத்தில் பொதுமக்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்” எனும் தலைப்பில், பொலிஸார் அறிவுரை வழங்குவது போல் அமைந்துள்ள அந்தச் செய்திக்கும் இலங்கை பொலிஸாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு ஏதேனும் அறிவித்தல் விடுக்கப்படுவதாயின், அவை…

Read More

அதிக வெப்பம் – விசேட அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பிள்ளைகளை நீரிழப்பிலிருந்து பாதுகாக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனவே பிள்ளைகளுக்கு அதிகளவு நீர், திரவ உணவுகளை வழங்கும்பி அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நன்றாக நீர் அருந்தும்படி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரு தடவையாவது…

Read More

பேருந்து கட்டண உயர்வு – அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  பேருந்து கட்டண அதிகரிப்பை 10 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.  அதன்படி, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா குறிப்பிட்டார்.

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.  இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல்…

Read More

QR பிரச்சினைகளை தீர்க்க புதிய உதவிச் சேவை

தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பில் பதிவு செய்யும்போது அல்லது அதைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களையும் தடைகளையும் விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும். இதன்படி, வாகனப் பதிவின்போது ஏற்படும் எந்தவொரு சிக்கல்களுக்கும் உதவி பெற, 076 019 1919 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஊடாக…

Read More