ஈராக்கின் மொசாட் அலுவலகம் மீது தாக்குதல்

ஈராக் நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் அலுவலகத்தை குறி வைத்து இன்று (23) அதிகாலை ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. ஈரான் ஆதரவுக் குழுவான அஷாப் அல் – கஹ்ஃப் இத் தாக்குதலை உறுதி செய்துள்ளது. மேலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறும் அவ் அமைப்பு எச்சரித்துள்ளது. இத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Read More

உலக வாழ் அமெரிக்கர்களை எச்சரித்தது இராஜாங்கத் திணைக்களம்!

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களையும், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்களையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்துகிறது.  வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு எச்சரிக்கைகளில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது ஏற்படும் வான்வெளி மூடல்கள் பயண இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். மத்திய கிழக்குக்கு வெளியே உள்ளவை உட்பட, அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.  ஈரானுக்கு ஆதரவான குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள மற்ற அமெரிக்க நலன்களையோ அல்லது…

Read More

தெஹ்ரான் முழுவதும் பாரிய வெடிப்பு சத்தங்கள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டபோது இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. தெஹ்ரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருகின்றன. இதனால் நகரின் பல பகுதிகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பாயும் சத்தமும், வெடிப்புகளும் பதிவாகி வருகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து…

Read More

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்

இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாரிய சேதங்கள் இல்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலை அந்த நாட்டின் 60சதவீத டீசல் தேவையையும், 50 சதவீத பெற்றோல் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Read More

அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி அவசர இலங்கை விஜயம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பது தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் இலங்கை வந்துள்ளார். கொழும்பில் அவர் ஜனாதிபதி அனுர உட்பட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.

Read More

அமெரிக்க விமானம் ஈராக் வான்பரப்பில் வீழ்ந்தது!

அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோடேங்கர், மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது. “ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  “வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது.இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது…

Read More

ஜோன்ஸ் சட்டத்தை தளர்த்த ட்ரம்ப் தீர்மானம்

அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டதாகவும், அமெரிக்கக் கொடியுடன், அந்நாட்டு ஊழியர்களால் இயக்கப்படுபவையாகவும் இருக்க வேண்டும் என்ற ஜோன்ஸ் சட்டத்தை தற்காலிகமாக தளர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தச் சட்டத்தை 30 நாட்களுக்கு தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு கொடி ஏந்திய எரிபொருள் தாங்கி கப்பல்கள் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரான் போர் காரணமாக…

Read More

எத்தியோப்பியாவில் மண்சரிவு – 50 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே மண்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், இந்த மண்சரிவுகளில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 125 பேர்…

Read More

ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு அதிகாரிகள் மரணம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த  சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிச் சென்ற கேப்டன் சயீத் அல் பலூஷி மற்றும் முதல் லெப்டினன்ட் அலி அல் துனைஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்….

Read More

ஈரான் கப்பல் தாக்கப்பட முன்னர் நடந்தது என்ன?

ஈரானிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் பின்னணியில் அவுஸ்திரேலிய கடற்படையினரின் பங்களிப்பு குறித்து விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை, காலியிலிருந்து சற்று தொலைவிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் மூவர் இருந்ததாக சென்றவாரம் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்போன்ஸி தெரிவித்திருந்தார். அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் சர்லொத் இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஈரானிய போர்க் கப்பலை தாக்கி மூழ்கடித்தது. இத்தாக்குதலில் குறைந்தது 87 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய போர்க் கப்பலான…

Read More